அனைத்து மதத்தினரும் இணைந்து அமைதியாக வாழும் நற்பண்பை சிங்கப்பூரர்கள் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
இன்னும் பல நாடுகளில் ஒற்றுமை உணர்வு காணப்படவில்லை என்றும் சில இடங்களில் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமைக்காக போராடும் வழக்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீலட் ரோடு சீக்கியர் கோவிலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீலட் ரோடு சீக்கியர் கோவில் சமூகத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.

