நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 70 ஆண்டு காலப் பாரம்பரிய மிக்க வங்கி ஆகும். இது நீலகிரி மாவட்ட மக்களுக்கும், மாவட்டம் முழுதும் உள்ள 36 பிரதம இணைப்பு சங்கங்களுக்கும் வங்கிச் சேவைகளை வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2023 – 2024ஆம் நிதி ஆண்டில் மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பாக 44969.16 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய வங்கிகள் மூலமாக 50,207 பேரும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக 58,344 பேரும் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் 2024 மற்றும் 2025 நிதி ஆண்டில் 6198.97 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வங்கிகளில் தங்க நகைக் கடன், சிறுவணிக கடன், வியாபாரக் கடன், அரசு மற்றும் அரசு சார்ந்த மகளிர் சம்பளக் கடன், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கடன், அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்கள் சம்பள கடன், தாம்கோ டாப்சிட்கோ தாட்கோ தனிநபர் கடன், தாம்கோ டாப்சட்கோ தாட்கோ குழு கடன், மகளிர் சுய உதவி குழுக் கடன், மாற்றத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், வீட்டு அடமானக் கடன், உணவு சார்ந்த சிறு நிறுவன மானியத் திட்டக் கடன், கணினி கடன்கள், சாலையோர வியாபாரக் கடன் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மலைபோல் குவிந்த மல்லிகை… வரத்து அதிகரித்ததால் மார்க்கெட்டில் விலை சரிவு…
மேலும், நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு கடன் திட்டங்களாகக் கல்விக்கடன் மூத்த குடிமக்களுக்கு மறு அடமானக் கடன் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனக் கடன் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கு நுகர்வோர் கடன் வீட்டு மனை கொள்முதல் சிறப்புக் கடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் & பாரம்பரியக் கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்கள் சிறப்புக் கடன் மேலும் கலைஞர் கனவு இல்லம் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் வாடிக்கையாளர்களுக்கிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகக் கூடுதலாக 1/2 சதவீதம் வட்டி வழங்கும் மலையரசி தொடர் வைப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இந்த வாய்ப்பு சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 555 நாட்களுக்குப் போட்டு வைக்கும் வைப்புக்கு 8% வட்டியும் மூத்த குடி மக்களுக்கு 8.50 % வட்டியும் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகக் கூட்டுறவுச் சங்கங்களின் கடன் விபரம் குறித்து முகாம்கள் நடைபெற்றது. இதன் மூலமாக 1808 பேர் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடனுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொதுத்துறை வங்கிகளில் 665 கிளர்க் காலிப்பணியிடங்கள்… விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..?
கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தயாளன் கூறுகையில், “நீலகிரி கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்குப் பொதுமக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலமாகப் பயிர்க் கடன், கால்நடை கடன் மற்றும் இதர கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்துப் பிரிவினருக்கும் கடன்களை வழங்கி வருகிறோம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் உதவும் வகையில் கடன்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான கடன் உதவிகள், கால்நடை கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், மகளிர் குழுக்களுக்கான கடன் மற்றும் பல்வேறு விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்த கலைஞர் கனவு இல்லம் திட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்த கல்விக் கடன் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் என பல்வேறு சிறப்புக் கடன்களும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாகப் பல்வேறு கிராமங்களிலும் சிறப்பு வைப்புத் தொகை மற்றும் கடன் வழங்குதல் முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 20,000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 16 ஆயிரம் பேர் எந்தவிதமான கடன்கள் வழங்கப்படுகிறது என்பதைக் குறித்து விசாரணை செய்தனர்.
இதையும் படிங்க: நாட்டுத் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு… இன்றைய காய்கறி மார்க்கெட் நிலவரம் என்ன?
கூட்டுறவுச் சங்கத்தின் சேவைகள் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் சேர வேண்டும் என்பதை எங்களுடைய முதன்மையான நோக்கமாக உள்ளது. சாதாரண ஏழை மக்களுக்கும் அரசின் கடன் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறோம்.
நீலகிரியின் கடைக்கோடி கிராமமாக உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் தொலைப்பேசி சிக்னலே இல்லாத இடத்தில் மொபைல் வேன் மூலமாகக் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாகப் பெண்களுக்குப் பணத்தை வழங்கியுள்ளோம். இந்தக் கிராமத்திற்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலமாக மட்டுமே இந்த பணப் பரிவர்த்தனை நடைபெற்றது என்பது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
