Last Updated:
எதிர்முனையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேனுடன் பேசி ரிலாக்ஸ் ஆகுவதற்காக கிரீஸில் சற்று தூரம் நடந்தார்.
சிக்ஸர் அடித்த அடுத்த சில நொடிகளிலேயே கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் விளையாட்டின் ஆதிக்கம் தான் நீடித்து வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு இந்த விளையாட்டு அனைவராலும் விரும்பப்படுகிறது.
இதன் காரணமாக உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போட்டியாக இந்திய பிரீமியர் லீக் மாறி உள்ளது. கிரிக்கெட் துறையில் ஏராளமான கோப்பைகளை பெற்றுள்ள இந்திய அணிக்கு உலகம் முழுவதும் நல்ல பெயரும் புகழும் உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலராலும் கொண்டாடப்படுகிறார்கள்.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சிக்ஸர் அடித்த வீரர் ஒருவர் அடுத்த சில வினாடிகளில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
A local cricketer in Ferozepur hit a six off a delivery, but just moments later, he suffered a heart attack and tragically collapsed on the ground, losing his life. pic.twitter.com/7j4WXolkFf
— Vipin Tiwari (@Vipintiwari952) June 29, 2025
அப்போது அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தில் அமரச் சென்ற அவர் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
June 30, 2025 12:36 PM IST