• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நோயாளியை அடித்த மருத்துவர்கள்…! வைரலாகும் வீடியோ… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நோயாளியை அடித்த மருத்துவர்கள்…! வைரலாகும் வீடியோ… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவமனை நிர்வாகமும், அரசாங்கமும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டன. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் பன்வார் என்ற நோயாளி என்டோஸ்கோபிக்காக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி (IGMC) மருத்துவமனைக்கு வந்திருந்தார். பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு 2 மணி நேரம் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நேரத்தில், அவருக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டதால், நுரையீரல் மருத்துவப் பிரிவு வார்டுக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டார். இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒரு ஆக்சிஜன் மாஸ்க்கை பொருத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில், அங்கு இருந்த மருத்துவர் முதலில் நோயாளியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் நோயாளியின் குடும்பத்தினரும், மருத்துவமனை உதவியாளர்களும், உள்ளூர்வாசிகளும் கோரிக்கை விடுத்தனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அறிக்கை கோரியது மற்றும் விசாரணைக்காக ஒரு குழுவை அமைத்தது.

A shocking incident has come to light from Shimla’s Indira Gandhi Medical College (IGMC), where a clash between a patient and a doctor has gone viral on social media.


According to reports, patient Arjun Panwar had come to the hospital for an endoscopy.

Before the procedure… pic.twitter.com/MUmM6rI0ZA

— Aditya Kumar Trivedi (@adityasvlogs) December 22, 2025

“நுரையீரல் பிரிவில் இருந்த ராகவ் என்ற மருத்துவரும், மற்றொரு மருத்துவரும் நோயாளியிடம் மிகவும் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக நோயாளியின் மருத்துவரான தாஷ்டா குற்றம் சாட்டினார். அவர்கள் அர்ஜுன் பவாரிடம் தரக்குறைவாகப் பேசினார்கள். அவர் ஒரு ஆசிரியர் என்றும், அர்ஜுன் இதுவரை யாரிடமும் தவறாக நடந்துகொண்டதில்லை” என்றும் கூறியுள்ளார். “அந்த மருத்துவரிடம் தன்னை இங்கு ஓய்வெடுக்க சொன்னதாக அவர் கூறியபோதும், அந்த மருத்துவர் தொடர்ந்து தவறாகவே நடந்துகொண்டார். தன்னுடன் கனிவாகப் பேசுமாறு அர்ஜுன் பவார் பலமுறை கேட்டுக் கொண்டபோதும், அந்த மருத்துவர் புண்படுத்தும் வகையில் பதிலளித்தார்” என்றும் தாஷ்டா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: India’s First Train | இந்தியாவில் இயக்கப்பட்ட முதல் ரயில் எது தெரியுமா…? பாம்பே – தானே ரயில் இல்லை…!

இந்த விஷயம் உடனடியாக நுரையீரல் துறைத் தலைவர், துணை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக டாக்டர் ராவ் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. “முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நாங்கள் எங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று டாக்டர் ராவ் கூறியுள்ளார்.

“அரசின் உத்தரவையடுத்து, அந்த மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் (Directorate of Medical Education) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதல் வகுப்பு ஏசி ரயில் பயணம் செய்ய ‘இவர்களுக்கு’ டிக்கெட் தேவையில்லை…! யாருக்கு தெரியுமா…?

இந்த சம்பவம் குறித்து ஒரு சில மணி நேரங்களுக்குள்ளேயே முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ராவ் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு இந்த சம்பவத்தைப் பற்றி பிற்பகல் 1:00 மணியிலிருந்து 1:30 மணிக்குள் தெரியவந்தது. உடனடியாக ஒரு குழு அமைக்கப்பட்டது, மாலை 6:00 மணியளவில் அரசு உத்தரவுகளைப் பிறப்பித்தது” என்று அவர் கூறியுள்ளார். “அந்த உயர்மட்டக் குழு இப்போது இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கும் என்றும், அந்த குழுவின் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் டாக்டர் ராவ் கூறியுள்ளார்.

Location :

Simla,Hugli,West Bengal

Read More

Previous Post

உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Next Post

ஒட்டகங்கள் மீது கொட்டும் பனி.. கடும் குளிரில் நடுங்கும் சவுதி அரேபியா

Next Post
ஒட்டகங்கள் மீது கொட்டும் பனி.. கடும் குளிரில் நடுங்கும் சவுதி அரேபியா

ஒட்டகங்கள் மீது கொட்டும் பனி.. கடும் குளிரில் நடுங்கும் சவுதி அரேபியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin