• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிகரெட் விலையை திடீரென 12% உயர்த்திய ஐடிசி.. அதுவும் இந்த 2 பிராண்ட் மட்டும் விலை உயர்வு..! | Sudden Price Hike: ITC Raises Cigarette MRP by Up to 12.6% – Check New Rates

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிகரெட் விலையை திடீரென 12% உயர்த்திய ஐடிசி.. அதுவும் இந்த 2 பிராண்ட் மட்டும் விலை உயர்வு..! | Sudden Price Hike: ITC Raises Cigarette MRP by Up to 12.6% – Check New Rates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிகரெட் விலையை திடீரென 12% உயர்த்திய ஐடிசி.. அதுவும் இந்த 2 பிராண்ட் மட்டும் விலை உயர்வு..!

இந்தியாவில் 25.3 கோடி மக்கள் புகையிலை பயன்படுத்தி வரும் வேளையில் நம் நாடு உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. புகைப்படிக்கும் பழக்கம் உள்ள நபர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி இரண்டு பிராண்ட் சிகரெட் விலையை மட்டும் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

மது அருந்துவதும், புகைப்பிடித்தலும் உடல் நலத்திற்குப் பேராபத்தை விளைவிக்க கூடும் என தொடர்ந்து கூறப்பட்டாலும், இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சந்தை இதை சார்ந்து உள்ளது.

சிகரெட் விலையை திடீரென 12% உயர்த்திய ஐடிசி.. அதுவும் இந்த 2 பிராண்ட் மட்டும் விலை உயர்வு..!

இந்த நிலையில் ஐடிசி தயாரிக்கும் கிளாசிக் கனெக்ட் மற்றும் கோல்டு ஃப்ளேக் சூப்பர் ஸ்டார் பிராண்ட் சிகரெட் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டு, புதிய விலையில் டீலர்களுக்கு விற்பனை செய்யவும் துவங்கியுள்ளதாக என்டிடிவி தெரிந்துள்ளது. இதன் மூலம் ரீடைல் சந்தையிலும் புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது சந்தையில் 20 சிகரெட் கொண்ட கிளாசிக் கனெக்ட் 428 ரூபாய்க்கு விற்க துவங்கப்பட்டு உள்ளது. முன்பு 390 ரூபாயாக இருந்த இது, 9.74 சதவீதம் விலை உயர்ந்து 428 ரூபாய் MRP விலையுடன் சந்தைக்கு வந்துள்ளது. இதேபோல் கோல்டு ஃபளேகிங் சூப்பர் ஸ்டார் 10 சிகரெட் கொண்ட பாக்கெட் விலை 79 ரூபாயில் இருந்து 12.66 சதவீதம் அதிகரித்து 89 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைத்த போது 4 வரி அடுக்குகளாக இருந்த வரி அமைப்பை 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. அப்போது புகையிலை போன்ற சின் கூட்ஸுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 40 சதவீத அடுக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதை தாண்டி பிப்ரவரி 1, 2026 முதல் சிகரெட் மீது அதன் நீளம் அடிப்படையில் கலால் வரி விதிக்கப்பட்டது.

கலால் வரி விதிப்புக்கு பின்பு சிகரெட் விலைகள் தாறுமாறாக உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மற்ற சிகரெட் விலையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விலை உயர்வு மூலம் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் லாபத்தை கொடுத்தாலும் சந்தையில் விற்பனை குறைய வழிவகுக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐடிசி நிறுவனம் தொடர்ந்து மலிவு விலை கொண்ட சிகரெட்களின் விலையை உயர்த்தி வருவதை திட்டமிட்டு செய்வதாகவும் கருத்து நிலவுகிறது. பிப்ரவரி மாத விலை உயர்வுக்கு பின்பு மக்கள் ப்ரீமியம் சிகரெட்களை வாங்குவதை குறைந்து மலிவான சிகரெட்களை வாங்கி வரும் நிலையில் தற்போது இதன் விலையை உயர்த்தியுள்ளது ஐடிசி. இதன் மூலம் ஐடிசி கூடுதல் வருமானத்தை பார்க்க முடியும்.

பிப்ரவரி மாதம் கிளாசிக் கனெக்ட் 300 ரூபாயில் இருந்து 360, அதன் பின்பு 390 வரையில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 428 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் Gold Flake Super Star 59 ரூபாயில் இருந்து 89 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

Share This Article

English summary

Sudden Price Hike: ITC Raises Cigarette MRP by Up to 12.6% – Check New Rates

Sudden Price Hike: ITC Raises Cigarette MRP by Up to 12.6% – Check New Rates — சிகரெட் விலையை திடீரென 12% உயர்த்திய ஐடிசி.. அதுவும் இந்த 2 பிராண்ட் மட்டும் விலை உயர்வு..!

Story first published: Wednesday, September 16, 2026, 15:43 [IST]

Other articles published on Sep 16, 2026

Read More

Previous Post

ஹோட்டல் அறை கிடையாது.. பிரக்ஞானந்தா – குகேஷ் உள்பட இந்திய செஸ் டீமை அவமானப்படுத்திய உஸ்பெகிஸ்தான்? | 2026 Chess Olympiad: India Chess team players including Gukesh and Praggnanandhaa waiting for rooms 5 hours in Uzbekistan

Next Post

ஷிரந்தி ராஜபக்ஷ குறித்து வெளியான செய்தி உண்மையா?

Next Post
ஷிரந்தி ராஜபக்ஷ குறித்து வெளியான செய்தி உண்மையா?

ஷிரந்தி ராஜபக்ஷ குறித்து வெளியான செய்தி உண்மையா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin