இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவில்(மே 8) பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல்கள் நடைபெறுவதால், இரு தரப்பில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பட்டயக் கணக்காளருக்கான சிஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

