நடப்பு ஐபிஎல் தொடரில் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களும், ரஹானே 29 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.
163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதனால், 17.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.
பின்னர் பேட்டியளித்த பஞ்சாப் கேப்டன் சாம் கரன், சென்னை அணியை எப்போதும் அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி, 2 புள்ளிகளை பெறுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார். வரும் 5ஆம் தேதி மீண்டும் சென்னை அணியுடன் விளையாட இருப்பதாகக் கூறிய அவர், அந்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்றும், அதற்கான உத்தியை வகுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சொந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், எதிரணிகளை அவர்களது சொந்த மைதானத்தில் தோற்கடித்து இருப்பதாகக் கூறிய சாம் கரன், இந்த முறையும் அப்படித்தான் நடப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், சில நேரங்களில் வித்தியாசமாக செயல்படுவதுதான் வெற்றிக்கு உதவும் என்றும் சாம் கரன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
