Last Updated:
சிஎஸ்கே அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் தொடரில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி சிஎஸ்கே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக் கொண்டுள்ளார். தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ் முடிந்த பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் , நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சேஷிங் செய்ய முயற்சித்தோம். அப்போது எங்களுக்கு புரிந்தது என்னவென்றால், பீல்ட் சிறிது மந்தமாகிவிடுகிறது. எனவே, ஒரு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை என்றால் மிடில் ஆர்டர்கள் அழுத்தத்திற்கு உட்படுகிறார்கள்.
ருத்துராஜ் கெய்க்வாட் கணுக்காலில் காயத்தில் அவதிப்படுகிறார். அதனால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் ஏற்கனவே பல போட்டிகளை இழந்துவிட்டோம். இப்போது அடிப்படை விஷயங்களை சரியாக செய்வது அவசியம். ருத்துராஜ்க்கு பதிலாக திரிபாதியும் முகேஷ் சவுதிரிக்கு பதிலாக அன்சுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Chennai,Tamil Nadu
April 11, 2025 7:24 PM IST


