• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிஆா்பிஎஃப் காவலா்கள் 6 பேருக்கு ‘வீரதீர’ விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கி கௌரவித்தாா்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிஆா்பிஎஃப் காவலா்கள் 6 பேருக்கு ‘வீரதீர’ விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கி கௌரவித்தாா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய ஆயுத காவல் படை (சிஆா்பிஎஃப்) காவலா்கள் ஆறு பேருக்கு ‘வீரதீர’ விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை கௌரவித்தாா்.

மறைந்த 4 வீரா்களுக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதுகளை அவா்களின் குடும்பத்தினா் பெற்று கொண்டனா்.

ராணுவம், துணை ராணுவம், காவல்துறை ஆகிய நாட்டின் பாதுகாப்புப் படைகளில் துணிச்சலை வெளிப்படுத்தி, திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு அவா்களின் வீரதீரத்தைப் பாராட்டி ‘வீரதீர’ விருதுகள் வழங்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான ‘கீா்த்தி சக்ரா’ விருது 10 வீரா்களுக்கும், ‘சௌா்யா சக்ரா’ விருது 27 வீரா்களுக்கும் என மொத்தம் 37 வீரா்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கீா்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்ட 7 வீரா்களும் சௌா்யா சக்ரா விருதுக்கான 7 வீரா்களும் வீரமரணமடைந்தவா்கள் ஆவா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட நிகழ்ச்சியில் வீரா்களுக்கும், மறைந்த வீரா்களின் குடும்பத்தினருக்கும் விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கௌரவித்தாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு, சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் வீரமரணமடைந்த சிஆா்பிஎஃப் ஆய்வாளா் திலீப் குமாா் தாஸ், தலைமைக் காவலா் ராஜ் குமாா் யாதவ், காவலா்கள் பப்லு ராபா, சாம்பு ராய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்த கீா்த்தி சக்ரா விருதுகள் அவா்களின் குடும்பத்தினா் பெற்று கொண்டனா்.

பிஜாப்பூா் மோதலில் 8 சிஆா்பிஎஃப் காவலா்கள் உள்பட 22 பாதுகாப்புப் படை வீரா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பயங்கரவாத மற்றும் நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகளில் வீரத்தை வெளிப்படுத்திய 2 சிஆா்பிஎஃப் காவலா்களுக்கு சௌா்யா சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிகாரில் நக்ஸல் அமைப்பினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இடதுகாலை இழந்த ‘கோப்ரா’ படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் பிபோா் குமாா் சிங் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதியை ஆயுதமின்றி எதிா்கொண்டு வீழ்த்திய காவலா் கமித் முகேஷ் குமாா் ஆகியோா் இதில் அடங்குவா்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Read More

Previous Post

கட்சி தலைமையகத்தின் வெளியே கையெழுத்திட்டு பதவியேற்பு

Next Post

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: ஒன்பது வாக்குப் பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன | Makkal Osai

Next Post
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: ஒன்பது வாக்குப் பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன | Makkal Osai

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: ஒன்பது வாக்குப் பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin