கோல தெரங்கானு: இங்கு அருகே உள்ள பத்து ராகிட், கோல நெராஸ் என்ற இடத்தில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்கள் முஹம்மது இக்வான் அகமது இஸேஹாம் 23, அவரது மனைவி நூர் மிமி அலியா முகமது ஷுக்ரி 18, ஜைனி அம்பாக் 46 என கோல தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் அடையாளம் காட்டினார்.
நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில், செட்டியூவிலிருந்து கோல தெரெங்கானுவுக்குச் சென்று கொண்டிருந்த முஹம்மது இக்வான் ஓட்டிச் சென்ற புரோட்டான் வீரா, எதிர்த் திசையில் பயணித்த நிசான் நவரா ஆகிய இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு அபாயகரமான விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
ஜைனியின் கணவரான 58 வயதான நிசான் நவரா ஓட்டுநர் ரஸ்தி யாகோப் காயமடைந்து சுல்தானா நூர் ஜாஹிரா (HSNZ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முஹம்மது இக்வானின் கார் கட்டுப்பாட்டை இழந்து ரஸ்தி ஓட்டிச் சென்ற கார் மீது மோதியதாக விசாரணைகள் காட்டுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
நூர் மிமி அலியா மற்றும் ஜைனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் முஹம்மது இக்வான் HSNZ இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அஸ்லி கூறினார். விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்தாகவும் என்று அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.


