• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாலையோர உணவகம்.. மாசம் ரூ.1.95 லட்சம் வருமானம்..!! சூப்பர் பிஸ்னஸ் ஐடியா..!! | ₹100 Thali, 65 Customers Daily: How a Small Village Food Shop Generates ₹1.95 Lakh Monthly Sales

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாலையோர உணவகம்.. மாசம் ரூ.1.95 லட்சம் வருமானம்..!! சூப்பர் பிஸ்னஸ் ஐடியா..!! | ₹100 Thali, 65 Customers Daily: How a Small Village Food Shop Generates ₹1.95 Lakh Monthly Sales
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாலையோர உணவகம்.. மாசம் ரூ.1.95 லட்சம் வருமானம்..!! சூப்பர் பிஸ்னஸ் ஐடியா..!!

இந்தியாவில் தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கும் அந்த வேலை எத்தனை நாள் நிரந்தரம் என உறுதியாக கூற முடியாது. இந்த சூழலில் தான் சுயதொழில் செய்ய பலரும் தயாராக இருக்கின்றனர். இந்த சுயதொழிலுக்கு பெரிதாக சிந்தித்து யோசனைகளை தீட்ட வேண்டாம். மிக எளிமையான ஒரு யோசனையே ஐடி வேலையை விட உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும்.

நளினி உனாகர் என்பவர் எக்ஸ் பக்கத்தில் அண்மையில் தான் கடந்து வந்த பிஸ்னஸ் மற்றும் அதன் வருவாய் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிறிய கடையை கண்டு அதன் வருமானத்தை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள் என கூறியுள்ளார். அண்மையில் நான் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன் அங்கே ஒரு உணவகத்தை கண்டேன். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது வருமான விவரங்களை கேட்டு ஆச்சர்யமடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

சாலையோர உணவகம்.. மாசம் ரூ.1.95 லட்சம் வருமானம்..!! சூப்பர் பிஸ்னஸ் ஐடியா..!!

அந்த கடையில் ஒரு வேளை சாப்பாடு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக இங்கே 65 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர் அப்படி என்றால் இங்கே தினமும் 6,500 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இதனை கணக்கிட்டால் மொத்தமாக ஒரு மாதத்திற்கு 1.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது என தெரிவித்துள்ளார்.

கணவன், மனைவி என இரண்டு பேர் மட்டுமே உணவையும் தயாரிப்பதால் வேலைக்கு ஆட்களும் இல்லை இதனால் சம்பளம் மிச்சம். காய்கறிகளும் சொந்த நிலத்தில் இருந்தே விளைவிக்கப்படுகிறது. எனவே வருமானத்தில் சுமாட் 60% லாபமாகவே இவர்களுக்கு கிடைக்கிறது என அவர் பதிவு செய்துள்ளார். ஒரு சிறிய சாலையோர கடை என பார்த்தால் இந்த வருமானம் ஆச்சர்யம் தருகிறது என கூறியுள்ளார்.

அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வழங்குவது கிராமப்புற மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களே டார்கெட் ஆடியன்ஸ், சாலை மீதே கடை இருப்பதால் தினமும் வியாபாரம் ஆகிவிடுகிறது. நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும்போது கடை வாடகை மிகவும் குறைவு. பணியாளர் செலவுகள் இல்லை என்பதால் செயல்பாட்டு செலவினம் குறைவு அதே வேளையில் லாபம் அதிகம்.

தினமும் சராசரியாக 65 வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவதன் மூலம், இந்த உணவகம் நிலையான தினசரி பணப்புழக்கத்தை உறுதி செய்கிறது. தரமான உணவு வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்கின்றன. சிக்கலான மெனு அட்டவணைகள் இல்லாமல், ஒரே வகையான முழுமையான உணவை வழங்குவதன் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு பிஸ்னஸாக இது இருக்கிறது.

பெரிய முதலீடுகளோ அல்லது ஆடம்பர வசதிகளோ இன்றி, சரியான விலை நிர்ணயம், தரம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கினால், சிறிய உணவகங்கள் கூட மாதம் 2 லட்சம் வரை வருமானம் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

₹100 Thali, 65 Customers Daily: How a Small Village Food Shop Generates ₹1.95 Lakh Monthly Sales

சாலையோர உணவகம்.. மாசம் ரூ.1.95 லட்சம் வருமானம்..!! சூப்பர் பிஸ்னஸ் ஐடியா..!! / A small food shop located on a busy main road near a village is gaining attention for selling a complete thali for just ₹100 and serving more than 65 customers and tiffin orders every day.

Story first published: Saturday, August 15, 2026, 12:50 [IST]

Other articles published on Aug 15, 2026

Read More

Previous Post

சுதந்திர தினம் 2026: டெல்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி? | Makkal Osai

Next Post
நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி? | Makkal Osai

நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin