• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!! | Bengaluru Parking Fees 2026: Pay Up to ₹25,000/Year to Park Outside Your Home – New Rules, Rates & Impact Explained

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!! | Bengaluru Parking Fees 2026: Pay Up to ₹25,000/Year to Park Outside Your Home – New Rules, Rates & Impact Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

இந்தியாவில் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மக்கள் வருகைக்கு ஏற்ப போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் சாலைகளிலும் , தெருக்களிலும் ஓரங்களில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு சாலையோரங்களில் காரை நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

பெங்களூரு நகரில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் வகையில் Greater Bengaluru Area (Parking) Rules, 2026 என்ற புதிய வரைவு கொள்கையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்புகள் மற்றும் பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

குடியிருப்பு பகுதிகளுக்கான ஆண்டு வாகன நிறுத்த கட்டணம் (Residential Parking Permit) வாகனங்களின் வகையை பொறுத்து ஆண்டுக்கு 15,000 முதல் 25,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறிய கார்களுக்கு 15,000 ரூபாய், செடான் கார்களுக்கு 20,000 ரூபாய், எஸ்யூவி கார்களுக்கு 25,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் ஒவ்வொரு மணிநேர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலையின் வகையை பொறுத்து இந்த கட்டணங்கள் மாறுபடும். கார்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்துவதை குறைக்கும் வகையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த வரைவு அறிக்கையில் அரசு அறிவித்துள்ளது. சாலைகளுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்தங்களில் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். அங்கு கார்களுக்கு மணிநேரத்திற்கு 20 முதல் 40 ரூபாய் வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும் செலுத்தலாம்.

சாலைகளுக்கு வெளியே உள்ள நிறுத்தங்களில் மாதாந்திர கட்டணம் 1,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வாகனங்களை நிறுத்தினால், மாதாந்திரக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரின் நெரிசலை குறைக்கவும், பொது சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் நிறுத்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

கர்நாடக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை, இது குறித்த வரைவு அறிவிக்கையை ஆகஸ்ட் 11, 2026 அன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வரைவு விதிகள் குறித்து தங்களது ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை, 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article

English summary

Bengaluru Parking Fees 2026: Pay Up to ₹25,000/Year to Park Outside Your Home – New Rules, Rates & Impact Explained

சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!! /Karnataka’s draft Greater Bengaluru parking rules propose steep annual residential permits (₹15,000–₹25,000 for cars) and high hourly on-street charges (₹40–₹80/hour), aiming to end free roadside parking and push drivers toward organized off-street facilities.

Story first published: Friday, August 14, 2026, 14:09 [IST]

Other articles published on Aug 14, 2026

Read More

Previous Post

மொத்தம் 47 கிலோ தங்கம்.. திண்ணையில் படுத்திருந்தவருக்கு திடீரென அடித்த ஜாக்பாட்! | ₹55 Crore Gold Haul Discovered by Renovation Crew in Dendermonde Building

Next Post

அன்வார் – ஜாஹிட் இடையேயான நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது – கைரி | Makkal Osai

Next Post
அன்வார் – ஜாஹிட் இடையேயான நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது – கைரி | Makkal Osai

அன்வார் - ஜாஹிட் இடையேயான நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது - கைரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin