Last Updated:
ஜப்பானில், ஆசா கோஸ்ட் ரயில்வே இயக்கும் DMV, ஷிகோகு தீவில் கொச்சி மற்றும் டோகுஷிமா இடையே 2021 முதல் இயங்கி, சாலையும் தண்டவாளமும் பயன்படுத்தும் உலகின் முதல் வாகனம்.
ஜப்பானில், சாலையில் பேருந்து போலவும், தண்டவாளத்தில் ரயில் போலவும் பயணிக்கும் டூயல் மோட் வெஹிகிள் தொழில்நுட்பம், போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு மோட்களிலும் இயங்கக்கூடிய உலகின் முதல் வாகனம் இதுவாகும். இந்த DMV வாகனம் வெறும் 15 வினாடிகளில் பேருந்து மோட்களிலிருந்து ரயில் மோட்களுக்கும், ரயில் மோட்களிலிருந்து பேருந்து மோட்களுக்கும் மாற முடியும். இந்த DMV 2021 முதல் இயங்கி வருகிறது மற்றும் ஜப்பானின் ஷிகோகு தீவில் உள்ள கொச்சி மற்றும் டோகுஷிமா மாகாணத்திற்கு இடையே இயங்குகிறது. இது தனியார் பொது ரயில்வே நிறுவனமான ஆசா கோஸ்ட் ரயில்வேயால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் vibeinjapan என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. அதில், ஜப்பானில், சாலையில் பேருந்து போலவும், தண்டவாளத்தில் ரயில் போலவும் பயணிக்கும் டூயல் மோட் வெஹிகிள் (DMV) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை வாகனம் உள்ளது. இது ஒரு சிறிய பேருந்து போல தோற்றமளிக்கிறது, ஆனால் சுமார் 15 வினாடிகளில், பேருந்து மோட்களிலிருந்து ரயில் மோட்களுக்கு மாறி ரயில் பாதைகளில் ஓட முடியும்.
ஒரே நேரத்தில் 21 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த வாகனம், தண்டவாளங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் பயணிக்கிறது. இந்த DMVகள் ஷிகோகு தீவில் உள்ள டோகுஷிமா மற்றும் கொச்சி மாகாணங்களில் இயங்கி வருகிறது, என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து வேகமாக வைரலாகி நெட்டிசன்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ஒரு யூசர், அமெரிக்காவில் இதுபோன்ற பராமரிப்பு வாகனங்களைப் பார்த்திருக்கிறேன், என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், இது ஜப்பானில் மட்டுமே நடக்கும், என்று கூறியுள்ளார். இன்னொரு யூசர், 1950 களில் ஜெர்மனியில் இதுபோன்ற பேருந்துகள் பயன்படுத்தப்பட்டது, என்று கூறியுள்ளார். இது மிகவும் அருமையாக இருக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வார நாட்களில், DMV வாகனமானது, அவகைனன், கைஃபு, ஷிஷிகுய், கண்ணூரா, உமினோயேகி டோயோ டவுன் மற்றும் மிச்சினோயேகி ஷிஷிகுய் ஒன்சென் ஆகியவற்றை இணைக்கும் பாதையில் இயங்குகிறது. இந்த வழித்தடத்தில் பயணக் கட்டணம் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து 200 யென் முதல் 800 யென் வரை (தோராயமாக ரூ.100 முதல் ரூ.450 வரை) வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில், இந்த வாகனமானது மிச்சினோகி ஷிஷிகுய் ஒன்சென் தாண்டி நீட்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பயணங்களின் போது, 200 யென் முதல் 2400 யென் வரை (தோராயமாக ரூ.100 முதல் ரூ.1300 வரை) வசூலிக்கப்படுகிறது.
December 02, 2025 10:34 AM IST
சாலையில் பேருந்து, தண்டவாளத்தில் ரயில் போலவும் பயணிக்கும் வாகனம்… எந்த நகரத்தில் தெரியுமா?


