Last Updated:
பாகிஸ்தானில் லாகூரில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் கூண்டிலிருந்து வெளியேறி பெண் மற்றும் குழந்தைகளை கடித்தது. உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிங்கம் வனவிலங்கு பூங்காவில் விடப்பட்டது.
பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி பெண் மற்றும் குழந்தைகளை சிங்கம் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம ஊர் தெருக்களில் நடந்து செல்வோரை நாய்கள் கடிப்பது போல, பாகிஸ்தானில் சிங்கம் சர்வசாதாரணமாகக் கடித்த அதிர்ச்சிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை அரசின் அனுமதி பெற்று பெருந்தொகை கொடுத்து வீட்டில் வளர்க்க அனுமதி உண்டு. அந்த வகையில், லாகூரில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து வெளியேறி தெருக்களுக்குள் ஓடியது.
அப்போது தெருவில் சென்ற பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கடித்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிங்கத்தை வளர்த்துவந்த உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். வீட்டுக்குத் திரும்பிய சிங்கம், வனவிலங்கு பூங்காவில் விடப்பட்டது. சாலையில் சென்ற மக்களை சிங்கம் தாக்கிய சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 07, 2025 7:25 PM IST
சாலையில் சர்வசாதாரணமாக சென்ற சிங்கம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்… பாகிஸ்தானில் அதிர்ச்சி!