15
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் கடந்த திங்களன்று நடைபெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம், செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், பொருளாளர் ஏ.ஏ. சலீம் உட்பட நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

