Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெற்றுள்ளது. ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஜெர்சியை அறிமுகம் செய்தனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் புதிய ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும்-நியூசிலாந்தும் மோத இருக்கின்றன. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, ஷமி உள்ளிட்டோர் ஒருவருக்கு ஒருவர் புதிய ஜெர்சியில் ஜாலியாக அரட்டை அடித்தனர். இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாத சூழலிலும், ஐசிசியின் விதிப்படி போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் ஜெர்சியில் இடம்பெற வேண்டும் என்பதால் இந்திய ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 18, 2025 2:01 PM IST