• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி பரிசு – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு | Champions Trophy prize money: ICC unveil bumper package

GenevaTimes by GenevaTimes
February 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி பரிசு – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு | Champions Trophy prize money: ICC unveil bumper package
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.59.90 கோடியாகும். இது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் (சுமார் ரூ.60 கோடி) அதிகமாகும். இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெறும். அரை இறுதி சுற்றில் தோல்வியை சந்திக்கும் அணிகளுக்கு தலா ரூ.4.86 கோடி கிடைக்கும்.

இதுதவிர லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு தலா ரூ.29.50 லட்சம் வழங்கப்படும். 5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.04 கோடியும் 7, 8-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.21 கோடியும் கிடைக்கும். மேலும் தொடரில் கலந்து கொள்வதற்காக 8 அணிகளுக்கும் தலா ரூ.108 கோடி வழங்கப்பட உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. இதன் பின்னர் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.



Read More

Previous Post

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 119 இந்தியர்கள் சனிக்கிழமை தாயகம் திரும்புகின்றனர்! | U.S. plane carrying 119 deportees likely to land in Amritsar on February 15

Next Post

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய டினேஷ்க்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய டினேஷ்க்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய டினேஷ்க்கு 2,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin