Last Updated:
பிளேயிங் லெவனில் யார் யார் களமிறக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நாக் அவுட் சுற்றிலும், லீக் சுற்றிலும் கடைசி போட்டியிலும் சரி இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ள நிலையில், யார் யார் லெவனில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மீண்டும் மோதுவதால் பழைய பகையை இந்திய அணி தீர்க்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், கடைசி நேரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பிளேயிங் லெவனில் யார் யார் களமிறக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நாக் அவுட் சுற்றிலும், லீக் சுற்றிலும் கடைசி போட்டியிலும் சரி இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. ஆனால், நாளைய போட்டியில் அநேகமாக இந்திய அணி நிர்வாகம் விளையாடும் XI-யில் ஒரு மாற்றத்தைச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் எடுக்கத் தவறிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்குப் பதிலாக, வேறு ஒருவர் களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குல்தீப் யாதவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷித் ராணாவை பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நடப்பு தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் விளையாடவில்லை. ஆனால் ஹர்ஷித் ராணா, சாம்பியன்ஸ் டிராபியின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார்.
மார்ச் 2 அன்று நியூசிலாந்திற்கு எதிரான கடைசி குரூப் ஏ போட்டியில் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வருண் 10 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், அவர் ஆடும் லெவனில் நிச்சயம் இடம் பெறுவார் என்றும் குல்தீப் யாதவ் இடம் கேள்விக்குறியாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. பேட்டிங்கில் காயம் இருந்தாலும், அது பெரிய அளவில் இல்லை என்பதால் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இடம் உறுதி என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிளேயிங் லெவனில் வாய்ப்புள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப் சிங்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 08, 2025 10:39 PM IST