Last Updated:
இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், ரோஹித் சர்மா, விராட் கோலி தங்கள் நான்காவது ஐ.சி.சி பட்டத்தை வென்றனர்.
நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதையடுத்து, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நான்காவது ஐ.சி.சி பட்டத்தை வென்றுள்ளனர்.
இந்த சாம்பியன்ஸ் கோப்பை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு 4ஆவது ஐசிசி கோப்பையாக அமைந்துள்ளது. விராட் கோலி இதற்கு முன்பு, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அணிகளில் இருந்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணிகளில் இருந்துள்ளார்.
எனவே இந்த 2025 சாம்பியன்ஸ் கோப்பை இந்த ஜோடிக்கு 4ஆவது ஐசிசி கோப்பையாக அமைந்துள்ளது. இதன் மூலம், இவர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்கள்.
எம்.எஸ்.தோனி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்றார். அதையடுத்து 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளார். இவர் வென்ற அனைத்து ஐசிசி கோப்பைகளும் கேப்டனாக இருந்து வென்றவை தான்.
இந்த பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஐந்து ஐ.சி.சி கோப்பைகளுடன் மிகவும் வெற்றிகரமான வீரராக முதலிடத்தில் உள்ளார். அவர் 3 முறை 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2 முறை சாம்பியன்ஸ் கோப்பையையும் ஆஸ்திரேலிய அணிக்காக வென்றுள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய வீரர்கள் வெள்ளை ஜாக்கெட் அணிவது ஏன்?
இந்த பட்டியலில் ரோகித் சர்மா 2ஆவது இடத்திலும், விராட் கோலி 3ஆவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து, ஆடம் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கிளன் மெக்ராத் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் தலா 4 ஐசிசி கோப்பைகளோடு உள்ளனர்.
March 10, 2025 10:36 AM IST