பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியாது. அதன் பின்னர், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
ஐசிசி தொடர்கள் நீங்கலாக இரு அணிகள் மட்டும் விளையாடும் தொடர் நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனிடையே, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கவுள்ள 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க:
‘தல’ தோனியின் இந்த போட்டோக்களை பார்த்திருக்கீங்களா? – யாரும் பார்த்திடாத அறிய புகைப்படங்கள் இதோ!
தற்போதுள்ள சூழலில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்திய அரசு தரப்பில் எடுக்கப்படும் முடிவே இறுதியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டால், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றதை சுட்டிக்காட்டி, ஐசிசி கூட்டத்தில் முறையிட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
