Last Updated:
அவருக்கு அடுத்தபடியாக ஆரோன் பிஞ்ச் (3,311 ரன்கள்) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் (3,282 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) டி20 தொடரில், அதிரடி மன்னன் கிரிஸ் லின் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
பிக் பாஷ் லீக் வரலாற்றில் 4,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கிரிஸ் லின் பெற்றுள்ளார். அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், இன்றைய போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 79 ரன்கள் (6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது கிரிஸ் லின்னின் 300-வது டி20 போட்டி என்பது கூடுதல் சிறப்பு. இவரது அதிரடியால் 122 ரன்கள் என்ற இலக்கை அ டிலெய்டு அணி எளிதாக எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவருக்கு அடுத்தபடியாக ஆரோன் பிஞ்ச் (3,311 ரன்கள்) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் (3,282 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
Dec 31, 2025 10:18 PM IST


