சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 இந்திய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் வெவ்வேறு கடைகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை
கடந்த ஜூன் 2 ஆம் தேதி பிற்பகல் 2.25 மணியளவில் முனையம் 3 இன் ஓய்வு பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட்டு நடந்ததாகவும், அது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில் பர்ஸ் ஒன்று திருடப்பட்டதாகவும், சிசிடிவியை பயன்படுத்தி, விமான நிலைய காவல் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களையும் கண்டுபிடித்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் 29 மற்றும் 30 வயதுடைய இந்தியப் பெண்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பர்ஸுடன் சேர்த்து கருப்பு பேக் மற்றும் சென்ட் பாட்டில் ஆகியவை திருடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2 பெண்கள் மீதும் நாளை ஜூன் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பெண்ணின் கைகால்களை துணியால் கட்டி போட்டு கொள்ளை; இரு இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

