Changi Airport: சாங்கி விமான நிலையத்தில் தொடர் கடைத் திருட்டுகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 32 வயதுமிக்க வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
அதாவது வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், மிட்டாய் பொருட்கள் மற்றும் பணப்பை (wallet) உள்ளிட்ட பொருட்களை அவர் திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்
அவர் திருடிய மேற்கண்ட பொருட்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட S$2,900 வெள்ளி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷில்லா பெர்பியூம் அண்ட் காஸ்மெட்டிக் கடையின் ஊழியர் ஒருவர் வாசனை திரவிய பாட்டில் காணாமல் போனதைக் கவனித்துள்ளார். இதனை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் காவல் படை நேற்று மே 5 அன்று (SPF) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அதாவது, வாசனை திரவிய பாட்டில் காணாமல் போனதை அடுத்து அந்த ஊழியர் சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்துள்ளார். பின்னர் போலீசார் அந்த வெளிநாட்டவரை கைது செய்தனர்.
கைதான அவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் மீது நாளை (மே 7) எட்டு திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
கடை திருட்டு சம்பவங்களை கடுமையாக பார்க்கிறோம் என்று கூறிய SPF, குற்றவாளிகள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
திருட்டு குற்றத்திற்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
TOP PHOTO: SPF

