சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு இந்தியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை ஜூலை 16 ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குற்றம் செய்ததாக கருதப்படும் 32 வயதான அனுக்ரா மசிஹுக்கு 4,500 வெள்ளியும், 31 வயதான ஸ்டான்லி மார்டினா சோனகாஷிக்கு 1,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் ஜூன் 24 கடையில் 180 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பை திருடு போனது குறித்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அதிகாரிகள் இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் ஒரே நாளில் 360 வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள வாசனை திரவியங்களை திருடியது தெரியவந்தது.
Follow us on : click here
The post சாங்கி விமான நிலையத்தில் இரண்டு இந்தியர்களுக்கு அபராதம்!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin