• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சாக்கடையில் மிதந்த கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி! தங்கத்தை சாக்கடையில் கொட்டும் ஒரே நாடு! | Tonnes of Gold and Silver Found Flowing Through Sewage Pipes

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சாக்கடையில் மிதந்த கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி! தங்கத்தை சாக்கடையில் கொட்டும் ஒரே நாடு! | Tonnes of Gold and Silver Found Flowing Through Sewage Pipes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Published: Monday, July 27, 2026, 13:57 [IST]

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த சாக்கடை நீரில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும் வெள்ளியும் கலந்து அடித்துச் செல்லப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த வியக்கத்தக்க தகவல் வெளிவந்துள்ளது.

Gold

ஆண்டிற்கு டாலர் 30 மில்லியன் மதிப்புள்ள உலோகம்

Eawag ஆராய்ச்சி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஆண்டுதோறும் தோராயமாக 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கடந்து செல்கின்றன. ஆனால், இதில் பெரும்பாலானவை மீட்டெடுக்கப்படாமல் வீணாகின்றன.

தற்போதைய சந்தை மதிப்பில் இந்த இரண்டு விலையுயர்ந்த உலோகங்களின் மதிப்பு மட்டும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். இவர்கள் நாடு முழுவதிலும் உள்ள 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்தனர்.

சாக்கடையில் தங்கம் எவ்வாறு கலக்கிறது?

இந்த ஆய்வில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமின்றி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் காடோலினியம் (1,070 கிலோ), நியோடைமியம் (1,500 கிலோ) மற்றும் இட்டர்பியம் (150 கிலோ) போன்ற அரிதான தனிமங்களும் கழிவுநீரில் கலந்திருப்பது தெரியவந்தது.

கழிவுநீரில் இந்த உலோகங்கள் கலப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.. வீடுகளில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நகைகள், பொருட்கள் மற்றும் பிற பணிகளில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய அளவிலான தங்கத் துகள்கள் சாக்கடையில் தெரிந்தோ தெரியாமலோ அடித்துச் செல்லப்படுகின்றன.

சுவிட்சர்லாந்தின் ஜூரா பகுதியில் உள்ள கடிகாரத் தொழிற்சாலைகளில் இருந்து தங்கம், ருத்தேனியம் மற்றும் ரோடியம் போன்ற உலோகங்கள் பெருமளவில் கழிவுநீரில் கலக்கின்றன.

கழிவுநீரில் இருந்து தங்கத்தை எடுக்க முடியுமா?

சாக்கடை நீரில் இவ்வளவு தங்கம் இருப்பது தெரிந்தும், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் யாரும் இறங்காததற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

கழிவுநீரில் இருந்து இந்த உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கு ஆகும் செலவு, அவற்றின் மதிப்பை விட மிகவும் அதிகம். உதாரணமாக, சுவிட்சர்லாந்து இறக்குமதி செய்யும் அலுமினியத்தில் 0.2 சதவீதமும், செம்பில் 4 சதவீதமும் மட்டுமே கழிவுநீரில் அடித்துச் செல்லப்படுகிறது. எனவே, இவற்றை பெரிய அளவில் சுத்திகரித்து எடுப்பது நஷ்டத்தையே தரும்.

சுவிட்சர்லாந்தின் டிசினோ என்ற பகுதியில் மட்டும் கழிவுநீர் சேற்றில் அதிகளவு தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள தங்கம் சுத்திகரிப்பு ஆலைகளால்) இது சாத்தியமாகியுள்ளது. அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்பது லாபகரமானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவிலும் இதே நிலைமை

சுவிட்சர்லாந்து மட்டுமின்றி அமெரிக்காவிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், அந்நாட்டின் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் சுமார் 13 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர் அமைப்பின் அளவைப் பொறுத்து இந்த மதிப்பு மாறுபடுகிறதே தவிர, உலகெங்கிலும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரில் விலையுயர்ந்த உலோகங்கள் கலப்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது.

English summary

Tonnes of Gold and Silver Found Flowing Through Sewage Pipes

Read More

Previous Post

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் கோரி வெடித்த ஆர்ப்பாட்டம்

Next Post

அரசியல், சினிமா, வர்த்தகம், பொருளாதாரம்.. அனைத்தும் தீர்மானிப்பது இனி GenZ தான்.. எப்படி? | India’s 400 Million Gen Z Will Decide Politics, Business and Economy: Why This Is a Once-in-a-Lifetime Demographic Shift

Next Post
அரசியல், சினிமா, வர்த்தகம், பொருளாதாரம்.. அனைத்தும் தீர்மானிப்பது இனி GenZ தான்.. எப்படி? | India’s 400 Million Gen Z Will Decide Politics, Business and Economy: Why This Is a Once-in-a-Lifetime Demographic Shift

அரசியல், சினிமா, வர்த்தகம், பொருளாதாரம்.. அனைத்தும் தீர்மானிப்பது இனி GenZ தான்.. எப்படி? | India's 400 Million Gen Z Will Decide Politics, Business and Economy: Why This Is a Once-in-a-Lifetime Demographic Shift

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin