Last Updated:
சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சில நிமிடங்களில், அவரது மனைவி 17வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய தம்பதி, அடுத்தடுத்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதன் மர்மம் என்ன?
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தர் ரெட்டி. 32 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 31 வயதான இவரது மனைவி பிபி ஷாஜியா சிராஜ் என்பவரும் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். வேலை காரணமாக இளம் தம்பதி பெங்களூருவிலேயே தங்கியுள்ளனர். இருவரும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியதால் ஒருவருக்கொருவர் நேரில் சந்திப்பதே அரிதாக இருந்துள்ளது.
இந்த நிலையில் வேலைக்குச் சென்று திரும்பிய பிபி வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டியும் உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த பிபி, செக்யூரிட்டி மற்றும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு கண்ட காட்சியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளே படுக்கை அறையில் சந்தர் ரெட்டி தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். அதைப் பார்த்ததும் அவரது மனைவி கதறி அழுது துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.
ஆனால், பித்துப் பிடித்தது போன்று இருந்த இளம்பெண், திடீரென 17வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.
சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சில நிமிடங்களில், அவரது மனைவி 17வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை… 17வது மாடியிலிருந்து குதித்த மனைவி… அடுத்தடுத்த விபரீத முடிவு ஏன்…?


