• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சஹ்ரான் ஹாஷிமின் இறுதி உரை! சாய்ந்தமருது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆதாரம்…

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சஹ்ரான் ஹாஷிமின் இறுதி உரை! சாய்ந்தமருது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆதாரம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக தண்டனை பெற்றவர்களும், தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம், ஹஸ்துன் மற்றும் இன்ஷாஃப் முபாரக் உள்ளிட்ட தற்கொலைக் குண்டுதாரிகளும் இரகசியமாக இணைந்து செயல்பட்டதாக வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின்போது இடம்பெற்ற வாதங்களில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



தாக்குதலுக்குத் தயாராகும் நடவடிக்கைகளில் குற்றவாளிகள் வெடிபொருட்களை மறைத்து வைப்பதற்காக பல பகுதிகளில் பாதுகாப்பான வீடுகளைப் பயன்படுத்தியதாகவும், அங்கிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் சோதனை

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின்படி, பாணந்துறை, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பான வீடுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த இடங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனைகளின்போது நைட்ரிக் அமிலம், யூரியா உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கணிசமான அளவில் கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், அந்த வீடுகளில் இருந்து சில பொருட்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் எடுத்துச் சென்றதாகவும், சில சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரிவிக்காமல் அங்கிருந்து வெளியேறியதாகவும் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.

தண்டனை பெற்றவர்களில் மில்ஹான், சனஸ்தீன் மற்றும் பில்தாஸ் சனஸ்தீன் உள்ளிட்டோர் அதிக அளவில் வெடிபொருட்களைச் சேகரித்ததுடன், அவற்றின் மீது சோதனைகளையும் மேற்கொண்டதாக ஆதாரங்கள் வெளிப்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்தது.



ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இத்தகைய சோதனைகள், பின்னர் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இருந்ததாக அரசுத் தரப்பு வழக்கில் முன்வைத்திருந்தது.

சாய்ந்தமருதில் கண்டெடுக்கப்பட்ட பென் டிரைவ் 

விசாரணையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக சாய்ந்தமருது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பென் டிரைவ் இருந்ததாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.



அந்தச் சாதனத்தில் சஹ்ரான் ஹாஷிம் தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் இறுதி உரையின் காணொளிகளும், சஹ்ரானின் புகைப்படங்களும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


நிபுணர் சாட்சியங்களின்படி, அந்த உரை 2019 ஏப்ரல் 20ஆம் திகதி, அதாவது ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய நாள், பிற்பகல் சுமார் 1.30 மணி முதல் 3 மணிக்குள் கல்கிசையில் உள்ள ‘ஸ்பான் டவர்’ கட்டிடத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.


துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் தோன்றியவர்கள்
காணொளியில் இடம்பெற்றிருந்த சிலர் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வைத்திருந்ததாகவும், அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய ஆடைகளை அணிந்திருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


மேலும், சஹ்ரான் ஹாஷிம் ஐ.எஸ். அமைப்பின் கொடியை ஒத்த கொடியின் பின்னணியில் இருந்து உரையாற்றியதாகக் காணொளி ஆதாரங்கள் காட்டியதாக நீதிபதி தெரிவித்தார்.


அந்த உரையில், மத மோதல்கள், சிலுவைப் போர்கள் மற்றும் இறுதிப் போர் போன்ற கருத்துகள் பேசப்பட்டதாகவும், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அந்த உரையின் இறுதியில், அப்போது ஐ.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த அபூபக்கர் அல்-பக்தாதிக்கு ‘பய்யத்’ அல்லது ‘பயாத்’ எனப்படும் விசுவாச உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


இந்த காணொளி மற்றும் அதில் இடம்பெற்ற காட்சிகள், சஹ்ரான் தலைமையிலான குழுவின் சித்தாந்தம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

RON97, மானியமில்லாத RON95 விலை 20 காசுகளும், டீசல் விலை 15 காசுகளும் உயர்வு. – Malaysiakini

Next Post

பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

Next Post
பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin