
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாமிலிருந்து கொழும்புக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வர்த்தக விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைப் பாதிக்கும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு நிறுவனம் எப்போதும் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வழக்கமான விமானப் பயணங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே, இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

