Last Updated:
பயணிகள் தங்களது பயண விவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அந்த நாட்டுக்கான விமான சேவையை வரும் 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய விமான நிலையங்களின் மீது ஏமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 330-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில், ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவில் நிலவும் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விமானச் சேவைகளைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கான நிலைமையைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பயணிகள் தங்களது பயண விவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இண்டிகோ நிறுவனம், சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை வரும் 24ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

