மயிலாடுதுறை வெங்கடேசன், திருச்சி ஆரிஃப் மக்பூல் தலைமையில் சவுதி அரேபியாவில் இஃப்தார் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சவுதி அரேபியாவில் தம்மாம் கிழக்கு மண்டல
NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், கடந்த 23-03- 2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி தம்மாம் ஜாய்கா ரெஸ்டாரன்டில் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் ஒருங்கிணைப்பாளர் முகவை சீனி முகம்மது. பொருளாளர் துறையூர் கமால் இணைந்து இருவரும் ஒருங்கிணைத்தார்கள் மூத்த உறுப்பினர் A S T சிவக்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஃபாருக் மற்றும் திருச்சி யூனுஸ் சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுனிவர்சல் நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர் பக்ருதீன் அப்துல் மஜீத் கலந்து கொண்டு, பல்வேறு கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். சவுதி அரேபியா அயலக அணி செயலாளர் அபூ ரயான் என்னும் ஆசிப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
மேலும் இதில், கேரளா அமைப்பிலிருந்து நாசு சவுக்கத் அலி, தமுமுக நிர்வாகிகள் மற்றும் முத்தமிழ் மன்றம் நிர்வாகிகள் என பல்வேறு தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அயலகத் தமிழர்கள் தின விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள். அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டத்தினை பாராட்டினார்கள். தமிழக அரசு வழிகாட்டுதலின் படி சவுதி அரேபியா கிழக்கு மண்டல NRTIA ஆற்றிய சமுதாய பணிகளின் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
