• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது!

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பாடலாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டதாகவும், மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனுக்கு நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

மிரட்டல் விடுத்தவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல், ‘மெயின் சிக்கந்தர் ஹூன்’ பாடலின் பாடலாசிரியருக்கும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

கர்நாடகத்தின் ராய்ச்சூரில் இருந்து கைது செய்யப்பட்ட சோஹைல் பாஷா, தான் எழுதிய பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பியதாகவும், அதற்காக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் கொள்ளைக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதத்தில் பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு…

Next Post

IND vs BAN | சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய மயங்க் யாதவ்

Next Post
IND vs BAN | சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய மயங்க் யாதவ்

IND vs BAN | சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய மயங்க் யாதவ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin