Last Updated:
பீகார் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இதில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
பிகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 67.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 65.08 விழுக்காடு வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது.
இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 122 தொகுதிகளில் மொத்தம் 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் பிஜேந்திர பிரசாத் யாதவ், பாபிரேம் குமார், ரேணு தேவி உட்படமொத்தம் ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். முன்னாள் துணை முதலமைச்சரும், கதிஹர் தொகுதி பாஜக வேட்பாளருமான தர்கிஷோர் பிரசாத், கதிஹர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பூர்ணியா மக்களவைத் தொகுதி சுயேச்சை எம்.பி.யான பப்பு யாதவ், பூர்ணியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஜன் சுராஜ் கட்சித் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், சசாரம் நகரில் உள்ள கொணார் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவரும், குடும்பா தொகுதி வேட்பாளருமான ராஜேஷ் ராம் தனது குடும்பத்தினருடன் ரிக்ஷா வண்டியில் சென்று வாக்களித்தார்.
இந்நிலையில் பீகார் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
November 11, 2025 6:16 PM IST


