• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம்

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற உற்சாகத்தில், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நடனமாடி மகிழ்ந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதன்கிழமை இரவு புறப்பட்டனர்.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார்.

விளம்பரம்

அட்லஸ் 5 ராக்கெட் மூலம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணித்த அவர்கள், 26 மணி நேரத்திற்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். அப்போது ஆர்வமிகுதியில் சுனிதா வில்லியம்ஸ் நடனமாடினார்.

Hugs all around! The Expedition 71 crew greets Butch Wilmore and @Astro_Suni aboard @Space_Station after #Starliner docked at 1:34 p.m. ET on June 6. pic.twitter.com/wQZAYy2LGH

— Boeing Space (@BoeingSpace) June 6, 2024

விளம்பரம்

ஸ்டார்லைனர் விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்தது. இதன் பின்னணியில் சுமார் பத்து ஆண்டு கால உழைப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்கலனில் விண்வெளி வீரர்களை அனுப்புவது என நாசா திட்டமிட்டது. இருந்தும் பல்வேறு முறை அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதன் ஒப்பந்த மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள். இந்த சூழலில் தற்போது அதன் முதல் பயணம் வெற்றி அடைந்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… சந்திரபாபு நாயுடு கொடுத்த லிஸ்ட் இதுதான்?

முன்னதாக, சுனிதா வில்லியம்ஸின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.



Read More

Previous Post

ஓப்போ செல்போனில் செய்யறிவு நுட்பம்!

Next Post

ஜெய்ன் ரய்யானின் பெற்றோர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி நீதி கேட்கின்றனர் | Makkal Osai

Next Post
ஜெய்ன் ரய்யானின் பெற்றோர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி நீதி கேட்கின்றனர் | Makkal Osai

ஜெய்ன் ரய்யானின் பெற்றோர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி நீதி கேட்கின்றனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin