• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம் | Indian astronaut Shubhanshu Shukla travel to International Space Station tomorrow

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம் | Indian astronaut Shubhanshu Shukla travel to International Space Station tomorrow
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) ககன்​யான் என்ற திட்​டத்தை 2027-ம் ஆண்டு செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளது. மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்பி அவர்​களை மீண்​டும் பத்​திர​மாக பூமிக்கு அழைத்து வரு​வது​தான் இதன் நோக்​கம்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் இன்று ஏவப்பட இருந்தது. ஆனால் காலநிலை காரணமாக புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர்.

இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்​ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது. இவர்​கள் அங்கு 14 நாட்​கள் தங்கி இருப்​பார்​கள் என கூறப்​படு​கிறது.

கடந்த 1984-ம் ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலையத்​துக்கு சென்ற ரஷ்​யா​வின் சோயுஸ் விண்​கலத்​தில் இந்​தி​ய​ரான ராகேஷ் சர்மா பயணித்​தார். சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்ற முதல் இந்​தி​யர் என்ற பெருமை இவருக்கு கிடைத்​தது. 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்​தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்​ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து சிறப்​பு பயிற்​சி பெற்​றார்.



Read More

Previous Post

பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ | DRDO provided technology to expand weapons production

Next Post

Tamilmirror Online || தையிட்டியில் போராட்டம் நடத்த 27 பேருக்குத் தடை

Next Post
Tamilmirror Online || தையிட்டியில் போராட்டம் நடத்த 27 பேருக்குத் தடை

Tamilmirror Online || தையிட்டியில் போராட்டம் நடத்த 27 பேருக்குத் தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin