Last Updated:
இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார். இவர் தான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.
இஸ்ரோ-நாசா இணைந்து மேற்கொள்ளும் ஆக்சியம் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு செவ்வாய்க்கிழமை விண்வெளி நிலையத்திற்குப் புறப்படவுள்ளார்.
விண்வெளித் துறையில் இஸ்ரோ தொடர்ச்சியாக பல சாதனைகளைச் செய்து வரும் நிலையில், நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-இல் இஸ்ரோ இணைந்துள்ளது. இந்தத் திட்டத்தில், இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறவுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.52 மணிக்கு கேப்டன் சுபான்ஷு சுக்லா புறப்படவுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ராக்கெட்டில் சர்வதேசக் குழு புறப்படவுள்ளது. விண்வெளி நிலையத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
சுக்லாவுடன் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மேலும் 3 பேர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். டிராகன் விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, புதன்கிழமை இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவராகவும் சுபான்ஷு சுக்லா உள்ளது குறிப்பிடத்தக்கது.
June 09, 2025 5:57 PM IST
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.. யார் இந்த சுபான்ஷு சுக்லா?


