விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லா (வயது 39) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு, மிஷன் – 4 (ஏஎக்ஸ் – 4) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி ஸ்பேஸ் செண்டரிலிருந்து விண்வெளிக்கு செல்லும் விண்கலன் மூலம் வரும் மே 29 ஆம் தேதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில முக்கிய காரணங்களினால் வரும் ஜூன் 8 ஆம் தேதிக்கு இந்தப் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

