• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய அணி நேற்று உலக கோப்பை டி20 தொடரை வென்ற நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. இவற்றில் இருந்து அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின.

விளம்பரம்

பார்படாசில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த மேட்சில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர் முழுவதும் தனது அதிரடியான பவுலிங்கால் எதிரணி வீரர்களை கலங்கடித்த ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் பரிசளிப்பு விழா பேட்டியின் போது, தான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பின்னர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக கூறினார். இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மிகுந்த நன்றியுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எப்போதும் இந்திய அணிக்கு என்னுடைய சிறந்த திறமையை கொடுத்து வருகிறேன். உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நிஜமாகியுள்ளது. இந்த நினைவுகளுக்கு மிக்க நன்றி.

விளம்பரம்

இதையும் படிங்க – T20 World Cup | மோடி முதல் தோனி வரை… பிரபலங்களின் வாழ்த்து மழையில் இந்திய அணி..

உங்கள் ஆதரவை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என்று ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் ஆட்டக்காரர்களாக கருதப்படும் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.



Read More

Previous Post

கேரள மலைவாழ் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி… மன் கி பாத் நிகழ்ச்சியில் சுவாரசியம்!

Next Post

Cello Tape Manufacturing : செல்லோ டேப் எப்படி செய்றாங்க தெரியுமா? துபாய் பறக்கும் நம்மா ஊர் செல்லோ டேப்கள்…

Next Post
Cello Tape Manufacturing : செல்லோ டேப் எப்படி செய்றாங்க தெரியுமா? துபாய் பறக்கும் நம்மா ஊர் செல்லோ டேப்கள்…

Cello Tape Manufacturing : செல்லோ டேப் எப்படி செய்றாங்க தெரியுமா? துபாய் பறக்கும் நம்மா ஊர் செல்லோ டேப்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin