Last Updated:
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரன் இதுவரை 61 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 39.66 ரன்களை எடுத்து இதுவரை மொத்தமாக 1983 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் 106 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பூரன், 2275 ரன்கள் விளாசியுள்ளார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை.
ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் பூரன் கடைசியாக விளையாடி இருந்தார்.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கம், நிக்கோலஸ் பூரனின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.
June 10, 2025 1:44 PM IST


