இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் ஆட்டக்காரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 41 வயது ஆகும் அவர், இன்று ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
1982 ஆம் ஆண்டு பிறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002 ஆம் ஆண்டு தனது 20-ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். 22 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
டெஸ்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் வரலாற்றில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில், 188 போட்டிகளில் விளையாடி டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 40 வயதை கடந்த போதிலும் இளம் வீரர்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது திறமையை பல போட்டிகளில் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் அவர் இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது-
நான் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டை மிகவும் நேசித்தேன். எனது நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியது பெருமை அளிக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இருந்து நான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். ஓய்வை அறிவிப்பதற்கு இது சரியான தருணம் என்று கருதுகிறேன். கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் பலருக்கு அவர்களது கனவை நனவாக்க நான் வழி ஏற்படுத்தி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
