• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்ச்சை வீரர்கள் சாதிப்பார்களா?… ஐபிஎல் ஏலமும், பிசிசிஐ தடையும்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சர்ச்சை வீரர்கள் சாதிப்பார்களா?… ஐபிஎல் ஏலமும், பிசிசிஐ தடையும்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பந்து வீச தடை விதிக்கப்பட்டபோதிலும், தடைகளை கடந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார் முன்னணி வீரர் ஒருவர். கண்காணிப்பு வளையத்தில் உள்ள வீரர் ஒருவரும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். யார் இவர்கள்?, இவர்களை தேர்வு செய்த அணிகளுக்கு உள்ள சிக்கல்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் கிரிக்கெட்டில், ஆண்டுக்கு ஆண்டு பல சாதனைகள் அரங்கேறி வருகின்றன. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம், சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகளின் நிர்வாகிகள், ஏலப்பட்டியலில் இருந்த வீரர்களின் சாதனைகள், பலம், பலவீனங்களை பல கட்டங்களாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தனர்.

விளம்பரம்

சில அணிகள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சில வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கின. அப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்த வீரர் தான் மணிஷ் பாண்டே. ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை வைத்துள்ள மணிஷ் பாண்டே பந்துவீச பிசிசிஐ தடை விதித்திருந்தது. அதாவது பந்துவீசும் முறை, விதிகளுக்கு உட்பட்டு இல்லை எனக்கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தடையை கண்டுகொள்ளாமல், 75 லட்சம் ரூபாய்க்கு அவர் கொல்கத்தா அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்வரிசையில் பேட்டிங் செய்வது தான் மணிஷ் பாண்டேவின் பலம் என்றாலும், பகுதி நேர பந்துவீச்சாளராகவும் இருந்து வருகிறார்.

விளம்பரம்

2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 94 ரன்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் மணிஷ் பாண்டே. 22 அரைசதங்கள் விளாசியுள்ள மணிஷ் பாண்டே, கொல்கத்தா அணி மீண்டும் மகுடம் சூட பங்களிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read | IPL Auction 2025 : ரூ. 3.40 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட இளம் பவுலர்… யார் இந்த அன்ஷுல் கம்போஜ்?

மணிஷ் பாண்டே பந்து வீச தடை செய்யப்பட்டபோது, ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் ஹூடாவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக அவரை கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளது பிசிசிஐ. எந்த வரிசையிலும் பேட் செய்து ரன் குவிக்கும் வல்லமை படைத்த ஹூடாவை, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

விளம்பரம்

கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்காக விளையாடி வந்த இவரை, மத்திய வரிசையில் பேட்டிங் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் சிஎஸ்கே தங்கள் பக்கம் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது. சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவுக்காக சதமும் விளாசியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அவ்வப்போது பந்துவீசும் ஹூடா, 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் ஆல்ரவுண்டர்களுக்கு தனி மவுசு உண்டு. ஆனால் ஹூடாவின் பந்துவீச்சு அனுபவத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்த முடியுமா என்பதற்கான விடை, பிசிசிஐ கையில்தான் உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

அதானியை கைது செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்; சோரோஸின் திரைக்கதை என பாஜக சாடல் | Congress repeats ‘arrest Gautam Adani’ call, BJP says Soros script

Next Post

நல்ல மகசூலை அள்ளித் தரும் காலி ஃபிளவர் உற்பத்தி… மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள்

Next Post
நல்ல மகசூலை அள்ளித் தரும் காலி ஃபிளவர் உற்பத்தி… மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள்

நல்ல மகசூலை அள்ளித் தரும் காலி ஃபிளவர் உற்பத்தி… மகிழ்ச்சி தெரிவிக்கும் விவசாயிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin