ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவரும், கைதுக்கு அஞ்சி நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபருமான லலித் மோடியின் மகள் தான் அலியா மோடி. தனது தந்தையின் வணிக புத்திசாலித்தனம் இவருக்கு இருப்பதால்தான் என்னவோ, அலியா மோடியின் முழு கவனமும் எப்போதும் தொழில் சம்மந்தமாகவே உள்ளது.
2022ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்ட அலியா மோடி, பாஸ்டனில் உள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் (Brandeis University) கலை வரலாற்றில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி லண்டனில் உள்ள இன்ச்பால்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் (Inchbald School of Design) கட்டடக்கலை உள்துறை வடிவமைப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தனது படிப்பை முடித்தபிறகு, AMRM இன்டர்நேஷனல் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் என்ற லண்டனை தளமாகக் கொண்ட இண்டீரியர் வடிவமைப்பு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார் அலியா மோடி. இந்நிறுவனத்தின் மதிப்பு 1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஆகும். அலியா மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.41 கோடி) அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லலித் மோடியின் மகளாக இருந்தாலும் பிசினஸ் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் அலியா மோடி. 1993ம் ஆண்டு பிறந்த இவர் படிப்பை முடித்தபிறகு இண்டீரியர் டிஸைனில் தனது கேரியரைத் தொடங்கினார். லண்டனில் சொந்த நிறுவனத்தை தொடங்கிய அலியா மோடி, 2022ம் ஆண்டு மே மாதம் இத்தாலியில் வைத்து பிரட் கார்ல்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிக்க:
ரூ.600 கோடி சொத்துக்கு அதிபதி… யார் இந்த பெண் தெரியுமா?
கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, தாரா ஹுவாங்கினுக்குச் சொந்தமான கட்டடக்கலை நிறுவனமான டிசைன் ஹவுஸ் லிபர்ட்டியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தார். இண்டீரியர் டிஸைனில் உள்ள நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள இங்கு பணிபுரிந்த அனுபவம் இவருக்கு பெருமளவு உதவியது. 2018ம் ஆண்டில் இவரது தாயார் மினல் மோடி புற்றுநோயால் உயிரிழந்ததை அடுத்து, தனது தொழில்நிமித்தமான வேலைகளில் அதிக ஈடுபாடும், அதிக நேரமும் செலவழிக்கத் தொடங்கினார்.
ஐபிஎல் தலைவராக இருந்தபோது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக லலித் மோடி மீது புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறிய அவர், தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், தனது தந்தையின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை தனது கேரியரை எந்த வகையிலும் மூழ்கடிக்காத வண்ணம் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கி கொண்டார் அலியா மோடி.
இதையும் படிக்க:
EMIல் செல்போன் வாங்கப்போறீங்களா..? கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!
அலியா மோடியின் சகோதரர் ருசிர் மோடியும் இந்தியாவின் புகழ்பெற்ற இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராக உள்ளார். இவர் Godfrey Phillips India Ltd, Modi Enterprises, KK Modi Group, Modicare ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். Modi Ventures-ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ருசிர் மோடி உள்ளார்.
ஜூலை 2022 நிலவரப்படி லலித் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.4,555 கோடி (தோராயமாக 570 மில்லியன் அமெரிக்க டாலர்) இருக்கும் என கூறப்படுகிறது.
.