அமெரிக்க பங்குச் சந்தை சரிவால், தொடர் பின்னடைவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், சரிவில் இருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியான அறிக்கையால், கடந்த 2ஆம் தேதியே இந்திய சந்தைகள் சரிவில் முடிந்தன. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும் இந்திய சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. உலக சந்தைகளிலும் இதே நிலை நீடித்தது. எனினும், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற தகவலில் பெரியளவு உறுதித்தன்மை இல்லாததால், உலக சந்தைகளில் ஏற்றம் தொடங்கியது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.
புதனன்று தொடக்கத்திலேயே குறிப்பிடத்தக்க ஏற்றத்தை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், சிறிய இறக்கத்தை அவ்வப்போது எதிர்கொண்டன. எனினும், மதியம் 2 மணிக்குப் பிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்த மும்பை பங்குச்சந்தை, 875 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி, 305 புள்ளிகள் உயர்வுடன், 24 ஆயிரத்து 297 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
இதையும் படிங்க: மதுரையில் டைடல் பூங்கா கட்டுமானம்… டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
எரிசக்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பங்குகளில் நல்ல ஏற்றத்தை கண்டன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)