Last Updated:
மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ், தனது ராஜினாமா குறித்த ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்துவந்து திடீரென கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த சி.வி. ஆனந்த் போஸ், தனது ராஜினாமா குறித்தான ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்துவந்த சி.வி. ஆனந்த் போஸ், கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏப்ரல் – மே மாதத்தில் நடக்க இருக்கும் சூழலில், சி.வி. ஆனந்த் போஸின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளுநர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்துவந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கேரள ஆளுநராக இருந்துவரும் ஆர்.வி. ஆர்லேகர் கூடுதலாக வகிப்பார் என குடியரசுத் தலைவரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | Kolkata: Former West Bengal Governor CV Ananda Bose says, “The fact remains that I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes.” pic.twitter.com/BaiG57SiR0
— ANI (@ANI) March 8, 2026
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் மாற்றம் பெரும் கவனம் பெற்ற அதேவேளையில், சி.வி. ஆனந்த் போஸின் ராஜினாமாவும் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தில், சி.வி. ஆனந்த் போஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “நான் மனப்பூர்வமாக எனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன். சரியான நேரம் வரும் வரையில் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் ரகசியமாகவே இருக்கும்.

