கூச்சிங்:
சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, 12,000க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறி, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலையில் இருந்து வெளியேற்றப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்ததால், அங்குள்ள 12 தற்காலிக நிலையங்கள் மூடப்பட்டன என்று, மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மாலை 4 மணி நிலவரப்படி, தற்போது மொத்தம் 9,312 பேர் 41 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
The post சரவாக் மாநிலத்தில் வெள்ளம் சீரடைகிறது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

