2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சரவாக்கின் இலவச மூன்றாம் நிலைக் கல்வி முயற்சிகுறித்த கூடுதல் விவரங்கள் நவம்பரில் அறிவிக்கப்படும் என்று மாநில கல்வி, புதுமை மற்றும் திறமை மேம்பாட்டு அமைச்சர் ரோலண்ட் சாகா வீ இன் தெரிவித்தார்.
படிப்புகளின் பட்டியல் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
“தற்செயம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தட்டும். சிஜில் பெலஜாரன் மலேசியா மற்றும் சிஜில் டிங்கி பெர்செகோலாஹான் மலேசியா தேர்வுகள் முடிந்ததும், பல்கலைக்கழகங்கள் விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும்,” என்றார்.
இன்று கூச்சிங்கில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கேட்டலிஸ்ட்கள் – ராஸ்பெர்ரி பை 2025 திட்டத்தை அறிமுகப்படுத்தியபின்னர் சாகா (மேலே) செய்தியாளர்களிடம் கூறினார்.
பிப்ரவரி 23 அன்று, சரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபங், மாநில அரசிடமிருந்து இலவச மூன்றாம் நிலைக் கல்வி நிதியைப் பெறும் சரவாக்கியர்கள் பட்டப்படிப்பு முடிந்ததும் சரவாக்கில் பணியாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
சரவாக்கிற்கு பங்களிக்க மீண்டும் திரும்புவதற்கு முன்பு, மாநிலத்திற்கு வெளியே அனுபவத்தைப் பெற பயனாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அபாங் ஜோஹாரி கூறினார்.
இந்த முயற்சி சேவை கடமைகளுடன் கூடிய உதவித்தொகை அல்ல, மாறாகப் பணியாளர்களை, குறிப்பாக STEM துறையிலும், சட்டம் மற்றும் கணக்கியலிலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இலவச உயர்கல்வி கொள்கையால் சுமார் 25,000 சரவாகிய மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.