• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல்

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த சம்மந்தனின்(Sampanthan)  இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.


சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அங்கஜன் இராமநாதன்(Angajan Ramanathan) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையில், “இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயா தனது 91 ஆவது வயதில் காலமான செய்தி அறிந்தேன்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு


அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர்.

சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல் | Tna Sambandhans Death Angajan Mp Condolence



தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.


திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.

சம்பந்தனின் மறைவு 


வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே.

சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல் | Tna Sambandhans Death Angajan Mp Condolence


இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இழந்துள்ளது.



அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Elementor #20034

Next Post

சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு – News18 தமிழ்

Next Post
சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு – News18 தமிழ்

சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin