7
நுரைச்சோலை அரபா நகர் கொய்யாவாடி முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் 2007 ஆம் ஆண்டு அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்திய 2018 ஆம் ஆண்டு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கொய்யாவாடி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சபை, பிரஜா பொலிஸ் அமைப்பு, பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர் குழாம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச் சுற்றுப் போட்டியில் மொத்தம் 16 வருட அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றன.
மாளிகைக்காடு குறூப் நிருபர்

