சிங்கப்பூரில் சம்பளம் மற்றும் வேலையை விட்டு நீக்குவது போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை புகார்கள் கடந்த ஆண்டில் 11,685 ஆக உயர்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் முத்தரப்பு கூட்டணி (TADM) ஆகியவை கூறியுள்ளன.
பெரும்பாலான கோரிக்கை புகார்கள் வந்தது சம்பளம் தொடர்பில் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்லாங்கில் லாரி ஓட்டுநர் மரணம்… தப்பியோடிய கார் ஓட்டுநர் கைது
தகவல் தொடர்பு துறையிலுள்ள உள்ளூர் ஊழியர்கள், கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலானோர் சம்பளம் தொடர்பான கோரிக்கை புகார்களை அளித்திருந்தனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 9,848 சம்பளம் தொடர்பான கோரிக்கைகளை பெற்றதாக MOM மற்றும் TADM கூறின.
வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தவரை, சம்பளம் தொடர்பான கோரிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் 1,000 க்கு 3.91 ஆக இருந்து 2024 இல் 1,000 க்கு 4.64 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களால் தாக்கல் செய்த சம்பளக் கோரிக்கை புகார்களில் கட்டுமானத் துறை மட்டும் 47 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் புகார் செய்த கட்டுமான நிறுவனங்கள் இழப்பை சந்தித்ததாகவும் மேலும் நொடிந்து போனதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதானால் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன நிதி சிக்கல்கள் காரணமாக தகவல் தொடர்பு துறையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

