வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோக நிறுவனங்களின் செயலி (IndianOil One, Hello BPCL, அல்லது HP Pay) மற்றும் Aadhaar FaceRD செயலியைப் பதிவிறக்கம் செய்து, நேரடி புகைப்படத்தைச் (Live Photo) சமர்ப்பித்து எளிதாக e-KYC மேற்கொள்ளலாம். இது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்படும். அல்லது ‘My LPG’ அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ, உள்ளூர் விநியோகஸ்தர் அலுவலகம் மூலமாகவோ அல்லது சிலிண்டர் விநியோகத்தின் போதோ பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.


