ஜோகூர்:
சமூக வலைதளங்களில் வந்த முதலீட்டு விலம்பரத்தை நம்பி 67 வயது முதியவர் RM 1.7 மில்லியன் பணத்தை இழந்துள்ளார்.
தனியார் நிறுவன மேலாளரான பாதிக்கப்பட்ட நபர், தான் ஏமாற்றப்பட்டது தொடர்பில் கடந்த ஜூன் 12 காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முதியவருக்கு நம்பிக்கை கொடுத்து, பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் முதலீட்டு நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என தெரிய வந்துள்ளதாக ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ M.குமார் தெரிவித்தார்.
முதலீடு செய்த மொத்த தொகையிலிருந்து 5 முதல் 10 விழுக்காடு வரையில் அன்றாடம் லாபம் பெறலாம் எனும் விளம்பரத்தை நம்பி, அவர் கடந்த்ஹே ஏப்ரல் 16 முதல் மே 30 வரையில் 5 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 12 பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாகவும், மொத்தமாக அவர் RM1,772,603 பணத்தை இழந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
நாட்டில் மோசடி சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் ஊடகங்கள் அடிக்கடி விளிப்புணர்வுகளை செய்து வருகின்றபோதும், மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது மிகவும் கவலைக்குரியது.




